Paristamil Navigation Paristamil advert login

Vignette Crit'Air - பெறுவது எப்படி? - போலித் தளங்களில் ஏமாறாதீர்கள்!!

Vignette Crit'Air - பெறுவது எப்படி? - போலித் தளங்களில் ஏமாறாதீர்கள்!!

9 பங்குனி 2025 ஞாயிறு 11:09 | பார்வைகள் : 1283


தற்போது மிகவும் கட்டாயமாக வாகனங்களில் ஒட்டப்பட வேண்டிய வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லையான Vignette Crit'Air இனைப் பெறுவது எப்படி?

போக்குவரத்து அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளமான certificat-air.gouv.fr இல் மட்டுமே பெற்றுக் கொள்தல் வேண்டும். 

இந்தத் தளம் உங்களிற்கு SMS அனுப்புவதன் மூலம் பணம் செலுத்தக் கோர மாட்டாது. போலித்தளங்களே SMS மூலம் பணம் பறிக்க எத்தனிக்கும்.

அதிகாரபூர்வத்தளத்தில் நீங்கள் உங்கள் வாகனத்திற்கான Crit'Air வில்லைகளை பெறும் போது, அதனை அனுப்புவதற்கு CB மூலம் வெறும் 3€81 சதங்கள் மட்டுமே அறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்