Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய பல குழுக்கள் களத்தில்!

முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய பல குழுக்கள் களத்தில்!

9 பங்குனி 2025 ஞாயிறு 12:09 | பார்வைகள் : 232


முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய தற்போது பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோன் அரசியல் அதிகாரத்தின் பாதுகாப்பின் கீழ் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படலாம் அல்லது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில், அவ்வாறு இடம்பெற்றால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தப்பிச் செல்லும் சந்தேக நபர்களைப் போலவே தேசபந்து தென்னகோனும் கைது செய்யப்படுவார் என்றும் புத்திக மனதுங்க கூறியுள்ளார்.

மேலும், தேசபந்து தென்னகோனுக்கு மறைந்துக்கொள்ள எவரேனும் உதவினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்திக மனதுங்க கூறியுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பெப்ரவரி 28 அன்று பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர், தொடர்பாக  எந்தத் தகவலும் பொலிஸாருக்கு கிடைக்காத நிலை காணப்படுகின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்