Paristamil Navigation Paristamil advert login

சார்ள்-து-கோலில் மாபெரும் போதை வேட்டை!!

சார்ள்-து-கோலில் மாபெரும் போதை வேட்டை!!

9 பங்குனி 2025 ஞாயிறு 21:03 | பார்வைகள் : 3191


சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் 211 கிலோ கொக்கெய்ன் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டடிருந்த இந்தப் போதைப் பொருட்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினர், இதனைக் கொண்டு வந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.

21 வயது முதல் 50 வயது வரையான, நான்கு பெண்களும், இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டு, பொபினி நீதிமன்றத்தினால் சிறையிலடைக்க்பபட்டுள்ளனர்.

இவர்கள் கடத்திவந்த போதைப்பொருள் 6 மில்லியன் யூரோக்கள் பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இதைக் கொண்டு வருபவர்கள் வெறும் சுமப்பாளர்கள் «அரடநள» எனவும் வெறும் பணத்திற்காக இப்படிப் பலர் போதைப்பொருள் சுமந்து வந்து பெரும் தண்டனைக்கு உள்ளாகி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்