நாளை திங்கட்கிழமை - 25 மாவட்டங்கள் கடும் புயல்மழை எச்சரிக்கையில்!!

9 பங்குனி 2025 ஞாயிறு 21:42 | பார்வைகள் : 912
நாளை திங்கட்கிழமை மீண்டும் 25 மாவட்டங்கள் கடுமையான புயல்மழை எச்சரிக்கைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஐபீரிய தீபகற்பம் (péninsule Ibérique) என அழைக்கப்படும் போத்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஊடாக மேலேறும் புயற்காற்றினால் பிரான்சின் 25 மாவட்டங்கள் முதற்கட்டமாகப் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
Allier, l'Ardèche, l'Ariège, l'Aveyron, les Bouches-du-Rhône, le Cantal, le Cher, la Corrèze, la Côte-d'Or, la Creuse, la Drôme, le Gard, la Haute-Garonne, l'Hérault, l'Indre, l'Isère, la Loire, la Haute-Loire, le Lot, la Nièvre, le Puy-de-Dôme, les Hautes-Pyrénées, le Rhône, la Saône-et-Loire, le Vaucluse ஆகியவை இந்த முதற்கட்ட எச்சரிக்கைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.