ஜாம்பவானின் மோசமான சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா

10 பங்குனி 2025 திங்கள் 08:11 | பார்வைகள் : 138
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மோசமான சாதனையைப் படைத்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
முன்னதாக, இந்திய அணியின் தலைவரான ரோஹித் ஷர்மா நாணயத்தை சுழற்றினார். ஆனால் அதில் அவர் தோல்வியடைந்தார்.
நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றி பெற துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
ரோஹித் ஷர்மா (Rohit Sharma) நாணய சுழற்சியில் தொடர்ச்சியாக தோற்பது 12வது முறையாகும்.
இதன்மூலம் அவர் மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் பிரையன் லாராவின் (12) மோசமான சாதனையை சமன் செய்தார்.