Paristamil Navigation Paristamil advert login

சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர்..... யார் தெரியுமா?

சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர்..... யார் தெரியுமா?

10 பங்குனி 2025 திங்கள் 08:45 | பார்வைகள் : 3220


பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.

பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.

அந்தவகையில், சொந்தமாக ரயில் வைத்திருக்கும் ஒரே இந்தியர் குறித்து பார்க்கலாம்.

லூதியானா-சண்டிகர் ரயில் பாதைக்காக, 2007ஆம் ஆண்டு ரயில்வே சில நிலங்களைக் கைப்பற்றியது.

அதில் கட்டானா கிராமத்தை சேர்ந்த சம்பூரன் சிங்கின் நிலமும் அடங்கும்.

ஒரு ஏக்கருக்கு ரூ.71 லட்சம் மட்டுமே வழங்கி, ரயில்வே துறை நிலத்தைக் கையகப்படுத்தியதைக் சம்பூரன் சிங் கண்டறிந்தார்.

இதனால் அவர், 2015ஆம் ஆண்டு சட்டத்தை நாடி அதில் வெற்றியும் பெற்றார். அவருக்கு ரூ.1.47 கோடி இழப்பீடு வழங்க ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.   

இருப்பினும், ரயில்வே ரூ.42 லட்சத்தை மட்டுமே சம்பூரன் சிங்கிற்கு வழங்கியதை தொடர்ந்து மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தை சம்பூரன் சிங் நாடினார்.

செஷன்ஸ் நீதிபதி ஜஸ்பால் வர்மா, செலுத்தப்படாத தொகையை திரும்பப் பெறுவதற்காக டெல்லி-அமிர்தசரஸ் ஸ்வர்ன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும் லூதியானாவின் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தையும் ஜப்தி செய்வதாகத் தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு லூதியானா ரயில் நிலையத்திற்குச் சென்ற சிங், ரயிலின் உரிமையைப் பெற்றார்.

பெரிய பெரிய தொழில்துறை குழுக்களால் கூட அடைய முடியாத ஒரு ரயிலின் உரிமையை இந்தியாவில் பெற்ற ஒரே நபர் என்ற பெயரை சம்பூரன் சிங் பெற்றார்.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரயில் சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டது. இதனால், சம்பூரன் சிங் 5 நிமிடங்கள் மட்டுமே ரயிலின் உரிமையாளராக இருந்தார்.

இந்த தனித்துவமான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சம்பூரன் சிங்கின் பெயர் வரலாற்றில் சதாப்தி எக்ஸ்பிரஸின் ரயில் உரிமையாளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்