'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு சிக்கலா?

10 பங்குனி 2025 திங்கள் 08:44 | பார்வைகள் : 171
சூர்யா நடிப்பில், ஆர்வி பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் "சூர்யா 45" படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் கதையுடன் ஒத்துப்போகிறது என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தொடங்கியது. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில், அதாவது ₹100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் பாகமான "மூக்குத்தி அம்மன்" படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கிய நிலையில், தற்போது "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் கதையைத்தான் அவர் ஆண் கடவுள் வெர்ஷனில் அதாவது அய்யனார் என்ற கடவுளை கதைக்களமாக்கி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் அய்யனார் கதாபாத்திரத்தில் தான் சூர்யா நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அய்யனார் மற்றும் வழக்கறிஞர் என இரண்டு முக்கியமான கதாபாத்திரங்களில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படம் முதலில் வெளியானால், "மூக்குத்தி அம்மன் 2" படத்திற்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால், சுந்தர்.சி-யின் மேக்கிங் மற்றும் ஆர்.ஜே பாலாஜியின் மேக்கிங் ஸ்டைல் முற்றிலும் வித்தியாசமானது என்பதால் ஒரே கதையாக இருந்தாலும் இரண்டு படங்களும் வெவ்வேறு அம்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.