Paristamil Navigation Paristamil advert login

உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழரசுக்கட்சி

உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழரசுக்கட்சி

10 பங்குனி 2025 திங்கள் 09:05 | பார்வைகள் : 183


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது என பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் நேற்று (08) நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்,வட்டாரக்கிளை தலைவர்கள்,மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்