குவைத்தில் யாசகம் பெறும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த திட்டம்

10 பங்குனி 2025 திங்கள் 09:09 | பார்வைகள் : 3253
குவைத்தில் புனித ரமழான் மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ரமழான் மாதத்தில் யாசகம் பெற்றுச் சிக்கிய வெளிநாட்டவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி யாசகம் பெற்ற 11 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் 8 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் சந்தைகளுக்கு முன்னால் யாசகத்தில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டதாக அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் காரணமின்றி பொது இடங்களில் உணவு உட்கொள்வது, நீர் மற்றும் பானங்கள் அருந்துவது அல்லது புகைபிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1