உணவைத் துறந்து போராடும் மருத்துவர்கள். நீதி கிடைக்குமா?

10 பங்குனி 2025 திங்கள் 10:25 | பார்வைகள் : 594
பிரான்சிஸ் மருத்துவ மனைகளில் காணப்படும் மருத்துவர்களின் பற்றாக்குறையை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படும் மருத்துவர்களே நிவர்த்தி செய்துள்ளனர்.
பொது மருத்துவர்கள், சிறப்பு துறைசார் மருத்துவர்களில் 20% சதவீதம் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள மருத்வர்களே பெரும்பாலும் அரச மருத்துவமனைகளில் காணப்படுகின்றனர்.
அவர்களுக்கான கொடுப்பனவுகள் பிரஞ்சு மருத்துவர்களுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு குறைவாகவே காணப்படுகிறது எனவும் பணிநேரம் வாரத்திற்கு 35 மணி நேரத்தை விட 48 மணிநேரமாக கடமையாற்ற வேண்டிய நிலை உள்ளது எனவும் குறித்த மருத்துவர்களால் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தாம் தொடர்ந்தும் 48 மணிநேர பணிக்கு brut 1900€ யூரோக்கள் கொடுப்பனவுடன் கடமையாற்ற முடியாது என தெரிவித்து அவர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். நேற்றைய தினம் சுமார் 300 வெளிநாட்டு மருத்துவர்கள் உணவு துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பின்பற்றி மேலும் பல மருத்துவமனைகள் போராட்டங்களில் இறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரான்ஸ் மருத்துவமனைகளில் கடுமையாக பாதிப்புகள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.