Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியின் ஹம்பர்க்கில் விமானங்கள் இரத்து ; 40,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு

ஜேர்மனியின் ஹம்பர்க்கில் விமானங்கள் இரத்து  ;  40,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு

10 பங்குனி 2025 திங்கள் 13:01 | பார்வைகள் : 201


ஜேர்மனி  முழுவதும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பாரிய பணி பகிஷ்கரிப்பின் ஒரு பகுதியாக விமான ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால் ஞாயிற்றுக்கிழமை ஹம்பர்க் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 300 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இந்த பணி பகிஷ்கரிப்பு  நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பையும் ஜேர்மனியின் வர்த்தகத் தொழிற்சங்கமான வெர்டி விடுக்கவில்லை.

காலை வேளை 10 விமானங்கள் சென்ற பின்னர் விமான நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததாக ஹம்பர்க் விமான நிலையம் ஒரு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்த பணிபகிஷ்கரிப்பினால் விமாநிலையத்திற்கு வருகை தரவிருந்த 144  விமானங்களும், புறப்படவிருந்த 139 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் 40,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பு திங்கட்கிழமை தொடரும் எனவும், பயணிகள் பாதுகாப்பு சோதனைகளையும் பாதிக்கும் என வெர்டி தெரிவித்துள்ளது.

உள்ளூர் விடுமுறை நாட்களில் பயணம் செய்ய முயற்சிக்கும் குடும்பங்களுக்கான திட்டங்களை இந்த நடவடிக்கை கடுமையாக பாதிக்கும் என விமான நிலையம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கம் 8 சதவீத சம்பள அதிகரிப்பு அதாவது, மாதத்திற்கு குறைந்தபட்சம் 350 யூரோக்கள் ($380), மேலதிக கொடுப்பனவு, மேலதிக விடுமுறை ஆகியவற்றை கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாத என நிறுவனங்கள் நிராகரித்துள்ளனர்.

"பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் ஏற்கனவே இரண்டு சுற்று பணிபகிஷ்கரிப்புகள் நடந்துள்ளன.

இந்த சர்ச்சைகளுடன் எந்த தொடர்பும் இல்லாத பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுவது நியாயமற்ற செயல்" என ஹம்பர்க் விமான நிலையத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

"பேச்சுவார்த்தைகளில் இறுதியாக ஒரு நியாயமான சலுகை கிடைக்கும் என்ற வகையில் நிறுவனங்கள் மீது அழுத்தம் கொடுக்க நாங்கள் இதைச் செய்கிறோம்," "வார இறுதியில் குறுகிய கால நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் மட்டுமே நாங்கள் பணிபகிஷ்கரிப்புகளை  திறம்படச் செய்ய முடியும்."என வெர்டியின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிராங்போர்ட், மியூனிக், ஸ்டட்கார்ட், கொலோன்/பான், டியூசெல்டார்ஃப், டார்ட்மண்ட், ஹனோவர், பிரெமன், பெர்லின் மற்றும் லீப்ஜிக்-ஹாலே ஆகிய விமான நிலையங்களும் திங்கட்கிழமை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்