Paristamil Navigation Paristamil advert login

Samuel Paty : கல்லூரிக்கு பெயர் மாற்றம்!!

Samuel Paty : கல்லூரிக்கு பெயர் மாற்றம்!!

10 பங்குனி 2025 திங்கள் 17:58 | பார்வைகள் : 642


பயங்கரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Samuel Paty இன் பெயரை அவர் சேவையாற்றிய கல்லூரியின் பெயராக மாற்றப்பட உள்ளது.

இந்த பெயர் மாற்ற கோரிக்கையினை கல்லூரி நிர்வாகம் கோரியிருந்த நிலையில், Samuel Paty இன் குடும்பத்தினரும், நகரசபையும் அனுமதி வழங்கியுள்ளது.  அதை அடுத்து Conflans-Saint-Honorine (Yvelines) நகரில் உள்ள collège du Bois d'Aulne எனும் அப்பாடசாலை  collège du Samuel Paty என பெயர் மாற்றப்பட உள்ளது.

இம்மாதம் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இந்த பெயர் மாற்றம் அறிவிக்கப்பட உள்ளது. 

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று Samuel Paty, இளம் பயங்கரவாதி Abdoullakh Anzorov இனால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்