ஹிந்துக்கள் மட்டுமே நடத்தும் ஆட்டிறைச்சி கடைகள் அறிமுகம்

11 பங்குனி 2025 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 604
குறிப்பிட்ட விலங்கை இறைச்சிக்காக வெட்டும் போது, இஸ்லாமிய சட்டம் முறைப்படி கடைபிடிக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய அளிக்கும் சான்று, ஹலால் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஹலால் முறைக்கு மாற்றாக, 'மல்ஹார்' சான்று வழங்கும் நடைமுறையை மஹாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஹலால் இறைச்சிக்கு கடைபிடிக்கப்படும் அதே விதிகள் தான், மல்ஹார் சான்றுக்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், ஹிந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு மட்டுமே இந்த சான்று வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த மஹாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானா நேற்று கூறியதாவது: மல்ஹார் சான்று பெற்ற ஆட்டிறைச்சி கடைகள், 100 சதவீதம் ஹிந்துக்களால் நடத்தப்படும். அங்கு பணியாற்றுபவர்களும் ஹிந்துக்களாகவே இருப்பர்.
இது ஹிந்து இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். எனவே, மல்ஹார் சான்று பெற்ற கடைகளில் மட்டுமே ஆட்டிறைச்சி வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.