■ நேரமாற்றம்!

11 பங்குனி 2025 செவ்வாய் 08:25 | பார்வைகள் : 2990
குளிர்காலத்தை முடித்துக்கொண்டு அடுத்த பருவகாலத்தை எதிர்கொள்ள நாடு தயாராகிறது. ஆண்டுதோறும் இடம்பெறும் நேரமாற்றமும் இடம்பெற உள்ளது.
இம்மாதம் மார்ச் 30 ஆம் திகதி நள்ளிரவு இந்த நேர மாற்றம் பதிவாகிறது. அதிகாலை 2.00 மணிக்கு நேரத்தினை ஒருமணிநேரம் அதிகமாக 3.00 என மாற்ற வேண்டும்.
இந்த நடைமுறை ஜேர்மனி, இங்கிலாந்தின் பின்னர் பிரான்சில் முதன்முற்சியாக 1916 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.