Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணி வீரர்கள் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்தது ஏன்? இப்படி ஒரு காரணமா?

இந்திய அணி வீரர்கள் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்தது ஏன்? இப்படி ஒரு காரணமா?

11 பங்குனி 2025 செவ்வாய் 08:51 | பார்வைகள் : 143


இந்திய அணி வீரர்கள் கோப்பையை வாங்கும் போது வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்தது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது.

துபாயில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி, கோப்பையை வென்றது.

இதன் மூலம், 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற கோப்பையை பரிசளிக்கும் விழாவில் இந்திய அணி வீரர்கள் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்து கோப்பையை பெற்றனர்.

ஏன் இந்திய அணி வீரர்கள் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்து கோப்பையை பெற்றனர் எந்த விவாதம் ரசிகர்களிடையே எழுந்தது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 1998 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்தாலும், கோப்பையை வென்ற அணி வீரர்கள், வெள்ளை நிற ஜாக்கெட் அணியும் நடைமுறை 2009 சாம்பியன்ஸ் தொடரில்தான் ஐசிசி அறிமுகப்படுத்தியது.

2009 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெற்ற ரிக்கி பாண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலியா அணிக்கு, வெள்ளை நிற ஜாக்கெட் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தற்போது வரை அனைத்து சீசன்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. முன்னதாக 2013 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணிக்கும் வெள்ளை நிற ஜாக்கெட் வழங்கப்பட்டது.

"வெள்ளை நிற ஜாக்கெட் என்பது ஒரு கௌரவத்தின் அடையாளம், சாம்பியன்கள் மட்டுமே இதை அணிவார்கள். இது தந்திரோபாய திறன் மற்றும் வெற்றி பெறுவதற்கான போராட்டத்தின் அடையாளம்" என ஐசிசி விளக்கமளித்துள்ளது.  

மும்பையைச் சேர்ந்த பபிதா என்ற வடிவமைப்பாளர், இந்த வெள்ளை ஜாக்கெட் உடையை விலை உயர்ந்த இத்தாலி கம்பளியை கொண்டு உருவாக்கி, தங்க நிறத்தில் சாம்பியன்ஸ் டிராபி லோகோவை அதில் வடிவமைத்துள்ளார்.    

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்