ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷு?

11 பங்குனி 2025 செவ்வாய் 11:01 | பார்வைகள் : 3250
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம், பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஜன நாயகன் படம் தான் நடிகர் விஜய்யின் கெரியரில் கடைசி படமாகும். இப்படத்திற்கு பின்னர் அவர் அரசியலில் நுழைய உள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, அதை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தயார் படுத்தும் வேலைகளில் முழுவீச்சில் இறங்கி உள்ளார். அண்மையில் அந்த கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தி அரசியல் களத்தை அதிரவிட்டார் விஜய்.
ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் இயக்குனர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயகன் படத்தில் அவர்கள் மூவரும் பத்திரிக்கை நிரூபர்களாக நடிக்கிறார்களாம்.
விஜய்யை அட்லீ, நெல்சன், லோகேஷ் ஆகியோர் கேள்வி கேட்கும்படியான காட்சி படத்தில் உள்ளதாம். இவர்கள் மூவருமே நடிகர் விஜய்க்கும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய்யும் அவர்களை தன் தம்பிகளைப் போல பார்க்கிறார். இதனால் தங்கள் அண்ணனுக்காக அவரின் கடைசி படத்தில் ஒரு சிறிய பங்காற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் மூவரும் எந்தவித சம்பளமும் வாங்காமல் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025