அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா..?
11 பங்குனி 2025 செவ்வாய் 11:49 | பார்வைகள் : 4176
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் ரிலீஸானது. வேகமாக ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பன்ச் வசனங்களை அடக்கி படத்தொகுப்பு செய்யபப்ட்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுவரை கிட்டட்தட்ட 4 கோடி பேரால் பார்க்கபப்ட்டுள்ளது.
இந்த படத்துக்குப் பிறகு அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதில் பல இயக்குனர்கள் பெயர் அடிபடுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அஜித், அடுத்தும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க விரும்புவதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் இணைந்து பணியாற்றிய போது ஆதிக்கின் பணிபுரியும் திறனைப் பார்த்து கவரப்பட்ட அஜித், மீண்டும் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ண முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan