ஹமாஸ் பயங்கரவாதிகள் - சர்ச்சைக்குரிய நூல் வெளியீட்டு

11 பங்குனி 2025 செவ்வாய் 14:16 | பார்வைகள் : 1087
ஹமாஸ் அமைப்பினை பயங்கரவாதிகள் என அழைப்பது அவர்களின் மனிதத்தன்மையை பறிக்கும் செயல் என லண்டனில் இடம்பெற்ற புத்தகநிகழ்வில் கருத்து வெளியாகியுள்ளது.
லண்டன் ஸ்கூல் ஒவ் எக்கனமிக்சில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில்; பேராசிரியர் ஜெரியோன் கன்னிங் இதனை தெரிவித்துள்ளார்.
ஹமாசினை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது அந்த அமைப்பினை மனிதன்மை இல்லாதவர்கள் என்ற சித்தரிப்பை உருவாக்குகின்றது அவர்களின் மனிதன்மையை பறிக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹமாசினை புரிந்துகொள்ளுதல் - ஏன் அது முக்கியமானது என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றுகையில்இதனை தெரிவித்துள்ள அவர் ஹமாசினை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஹமாஸினை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என தெரிவிக்கும் இந்த நூல் குறித்து கடந்த சில வாரங்களில் கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பல்கலைகழகம் நூல்வெளியீட்டு நிகழ்வை நிறுத்துவதற்கு மறுத்ததுடன் கருத்து சுதந்திரத்தை மதிப்பதாக தெரிவித்திருந்தது.
நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் இஸ்ரேலிய கொடியுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வு ஹமாஸ் குறித்த பிரச்சாரத்திற்கான தளத்தை வழங்கும் என பிரிட்டனிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஹமாசினை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியமை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது எனதெரிவித்துள்ள பேராசிரியர் ஜெரியோன் கன்னிங் இது தாக்குதல்களிற்கான வரலாற்று சூழமைவினை அழிக்கின்றது,இது ஹமாசினை மாத்திரமல்ல அனைத்து காசா மக்களையும் மனிதாபிமானம் அற்றவர்களாக கருதும் நிலையை அவர்களின் மனிதத்தன்மையை பறிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 7ம் திகதி தாக்குதலின் பின்னர் ஹமாசினை திட்டமிட்ட முறையில் தவறாக சித்தரித்து வந்துள்ளனர் என தெரிவித்துள்ள நூலாசிரியர் ஹெலெனா கொபன் ஆக்கிரமிப்பிற்கு எதிரான அதன் எதிர்ப்பு என்பது சர்வதேச சட்டங்களின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
ஹமாசினை தவறாக சித்தரிக்கும் விடயத்தில் பிரிட்டனின் கோர்ப்பரேட் ஊடகங்கள் எவ்வளவு தூரம் செயற்பட்டுள்ளன என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அவர் ஹமாசினதும் அதன் செயற்பாடுகளும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் ஹமாஸ் வெறுமனே தனது எதிர்ப்பினை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை ஆக்கிரமிப்பிற்கு எதிராக தனது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றது இதற்கு சர்வதேச மனிதாபிமான சட்டம் அனுமதியளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.