Essonne : ஏழு பிள்ளைகளின் தயார் மீது கத்திகுத்து!!

11 பங்குனி 2025 செவ்வாய் 15:51 | பார்வைகள் : 1163
35 வயதுடைய பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். அவர் ஏழு பிள்ளைகளின் தயார் என தெரிவிக்கப்படுகிறது.
Grigny (Essonne) நகரில் இத்தாக்குதல் சம்பவம் மார்ச் 11, இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. Avenue des Sablons வீதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குறித்த பெண் காலை 9 மணி அளவில் தாக்கப்பட்டுள்ளார். அவரது தலையிலும், பின் பகுதியிலும் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது அவரது 1 தொடக்கம் 9 வயது வரையுள்ள ஏழு பிள்ளைகள் உடன் இருந்ததாகவும், அவர்களுக்கு உளநல சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளது.