வெப்பத்தினால் சென்ற ஆண்டு 3,700 பேர் மரணம்!!

11 பங்குனி 2025 செவ்வாய் 17:37 | பார்வைகள் : 788
சென்ற 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் 3,700 பேர் வெப்பம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் பொது சுகாதார மையம் இதனை அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளை விட சென்ற ஆண்டு சராசரியாக 0.7°C வெப்பம் அதிகமாக பதிவாகியிருந்தது. 1900 ஆம் ஆண்டின் பின்னர் அதிக வெப்ப நாட்கள் பதிவான ஆண்டாகவும் அது பதிவானது.
இந்நிலையில், 3,711 பேர் வெப்பத்தின் தாக்கம் காரணமாக பதிவானதாகவும், அவர்கள் அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் சுகாதார மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக ஜூலை 28 முதல் ஓகஸ்ட் 14 ஆம் திகதி வரையான நாட்களில் மட்டும் 663 பேர் உயிரிழந்திருந்ததனர்.