பிரான்சில் உள்ள கடை ஒன்றுக்கு வருகைதந்த MrBeast!!

12 பங்குனி 2025 புதன் 07:20 | பார்வைகள் : 1293
அமெரிக்காவின் Youtube பிரபலமும், தொழில்முனைவோருமான மிஸ்ட்டர் பீஸ்ட் (MrBeast), பிரான்சில் உள்ள விற்பனை நிலையத்தில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
உலகில் அதிக பின் தொடர்பவர்களைக் (subscribers ) கொண்ட மிஸ்ட்டர் பீஸ்ட் சொக்கலேட் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார். Feastables எனும் அவரது சொக்கலேட் விற்பனையை பிரெஞ்சு மக்களுக்கு அறிமுகம் செய்வதற்காக அவர் அண்மைய நாட்களில் ஐரோப்பாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன்னர் லண்டனில் தனது சொக்கலேட்டினை அறிமுகம் செய்த அவர், மார்ச் 10 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று Yvelines மாவட்டத்தின் Chambourcy நகரில் உள்ள Carrefour விற்பனையத்துக்கு வருகை தந்திருந்தார்.
மிஸ்ட்டர் பீஸ்ட்டின் இந்த சொக்கலேட் விற்பனை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து அதிகரித்தே வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபம் பார்த்த நிறுவனம், சென்ற 2024 ஆம் ஆண்டில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபம் ஈட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை YouTube இல் அவர் 372 மில்லியன் பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.