Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தை இடிக்க கட்டளையிட்ட ஹிட்லர்!!

ஈஃபிள் கோபுரத்தை இடிக்க கட்டளையிட்ட ஹிட்லர்!!

2 ஆனி 2017 வெள்ளி 11:34 | பார்வைகள் : 18406


இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் சர்வதிகாரி அடோப் ஹிட்லர் பிரான்ஸ் மீது படையெடுத்தான் என்பது நாம் அறிந்த வரலாறு..!! ஈஃபிள் கோபுரத்தின்  மின் தூக்கிகள் வெட்டப்பட்டதால் ஹிட்லரால் மேலே ஏற முடியாமல் போனது என்பதும் நீங்கள் அறிந்தது தான். ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லர் ஈஃபிள் கோபுரத்தை இடிக்கச் சொன்னான். அப்படியிருந்தும் கோபுரம் தப்பியது எப்படி??
 
ஜூன் மாதம் 14 ஆம் திகதி, 1940 ஆம் ஆண்டு.. தலைநகர் பரிசில் நாசிப்படைகள் ஆக்கிரமிப்பு செய்தன. 'உலகின் உயரமான கோபுரமாமே? பார்க்கலாம்!' என பரிசுக்கு படைகளோடு வந்தார் ஹிட்லர்! 
 
ஆனால் ஹிட்லருக்கு காத்திருந்தது பெரும் சோகம்.. ஜெர்மனியின் படைகள் ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கும் போதே, ஈஃபிள் கோபுரத்தில் ஏறுவதற்குரிய லிஃப்ட் கம்பிகள் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. 
 
உண்மையில், ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் ஜெர்மனியின் கொடியை பறக்கவிட வேண்டும் என்பது தான் ஹிட்லரின் கனவு. ஆனால் கோபுரத்தில் ஏறுவதற்கு 1710 படிகள் ஏறவேண்டும். ஆகிற கதையா அது.. ?? 'பரிசை சிதையுங்கள்... ஈஃபிள் கோபுரத்தை தகர்த்து எறியுங்கள்!' என ஜெர்மனியின் இராணுவ ஜெனரல் Dietrich von Choltitz க்கு கட்டளையிட்டுவிட்டு.. அங்கிருந்து செல்கிறார் ஹிட்லர்! 
 
ஆனால் அது நடக்கவில்லை. ஹிட்லரின் கட்டளையை ஜெனரல் காதில் வாங்கவில்லை. ஈஃபிள் கோபுரத்தில் ஒரு இம்மியளவு சிராய்ப்பு கூட பதியவில்லை!! 
 
இரண்டாம் உலக மகா யுத்தத்தில்.. பரிஸ் மக்கள் உடமைகளை தாங்கிக்கொண்டு பரிசை விட்டு வெளியேறினார்கள். தன் அன்பு மக்களின் மீள் வருகைக்காக இரும்பு மனுஷி கண்ணீருடன் காத்திருக்கலானாள்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்