சுகாதார வல்லுநர்கள் நோயாளிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு.

12 பங்குனி 2025 புதன் 10:06 | பார்வைகள் : 627
தனியார் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் பிரான்ஸ் முழுவதும் அதிகரித்து உள்ளதை கண்டித்து இன்று புதன்கிழமை 12/03 நாடு தழுவிய ரீதியில் தனியார் மருத்துவர்கள், தாதியர்கள் தங்களின் அலுவலகங்களை 11 மணிமுதல் மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு சுமார் 70 மருத்துவ துறைசார்ந்தோர் நோயாளர்களால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றனர், பெரும்பாலும் நோயாளர்கள் கேட்கும் மருத்து விடுப்பு சான்றிதழ் வழங்க மறுக்கும் போதும், தேவையற்ற மருந்துச் சீட்டுகளை மருத்துவர்கள் வழங்க மறுக்கும் போதும் இத்தகைய தாக்குதல்கள் மருத்துவ துறையினர் மேல் மேற்கொள்ளப்படுகிறது என தெரியவருகிறது.
சில இடங்களில் தனியார் மருத்துவர்களின் அலுவலகங்களில் களவாடும் நோக்கிலும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றது, "தமக்கான பாதுகாப்பை ஏற்படுத்தி தரும் சட்டம் பிரான்சில் இல்லையா? நாங்கள் மிகுந்த பாதுகாப்பு இன்மையின் உணர்வோடு பயத்துடன் நோயாளர்களை அணுகும் நிலையுள்ளது" என தனியார் மருத்துவர்களும் தாதியர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.