Paristamil Navigation Paristamil advert login

கருவாட்டு குழம்பு

 கருவாட்டு குழம்பு

12 பங்குனி 2025 புதன் 10:28 | பார்வைகள் : 133


நாகர்கோவில் ஸ்டைலில் கமகமக்கும் மனமிக்க விலைமீன் கருவாடு குழம்பு. கேட்டாலே நாவில் எச்சி‌ ஊரும் சுவையில் இந்தமுறையில் செஞ்சு சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள்: விலைமீன் கருவாடு, மாங்காய், கத்திரிக்காய், வாழைக்காய், வழுதனங்காய், முருங்கைக்காய், தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்.

செய்முறை: கருவாட்டினை நன்றாக இரண்டு முறை சுடுதண்ணீரில் கழுவி எடுக்கவும். தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் சாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

பின்பு மண் சட்டியில் கருவாடு, தக்காளி, வழுதனங்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய், கொஞ்சும் புளி கரைத்து ஊற்றிவிட்டு ஆகியவற்றுடன் அரைத்து எடுத்து மசாலாவை ஒன்றாக மிக்ஸ் செய்து மண் சட்டியில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்கும் போது கருவேப்பிலை போட்டு, கடுகு வெந்தயம், சின்ன வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றிவிட்டு கடைசியாக மாங்காய் போட வேண்டும். சற்று கொதிக்க விட்டு எடுத்தால் கமகமக்கும் மனத்துடன் நாகர்கோவில் ஸ்டைலில் கருவாட்டு குழம்பு ரெடியாகிவிடும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்