விட்றாதீங்கண்ணா....! - சீமானுக்கு தைரியம் கொடுத்த அண்ணாமலை

12 பங்குனி 2025 புதன் 17:13 | பார்வைகள் : 4406
கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, நடிகை கொடுத்த பாலியல் புகார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று சீமானை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அவருக்கு தைரியம் கூறியுள்ளார்.
பா.ஜ.க. நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அங்கு வந்த சீமானை சந்தித்தார். காரில் அமர்ந்திருந்த சீமானுக்கு கைகொடுத்த அண்ணாமலை, எப்படிண்ணா இருக்கீங்க? என்று கேட்டார். அதற்கு சீமான் நலமாக இருக்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து அண்ணாமலை, "பைட் பண்ணிட்டே இருங்கண்ணா... ஸ்ட்ராங்கா இருங்கண்ணா... விட்றாதீங்கண்ணா" என்று கூறிவிட்டுச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகி வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1