போலி மோனலிசா ஓவியம்!!
1 ஆனி 2017 வியாழன் 12:30 | பார்வைகள் : 19316
உலகில் எல்லா பொருளுக்கும் ஒரு போலி இருக்கும்... அதுவும் மிக வெற்றிகரமான ஒரு விஷயம் என்றால் ... போலிகளுக்கு பஞ்சமே இருக்காது... மோனாலிசா ஓவியத்தில் போலி ஓவியங்கள் உண்டு.. ஒன்றா இரண்டா... எண்ணிக்கையில் அது பல நூறு.. !!
மோனாலிசா ஓவியத்தை ஒரு நிமிடம் நினைவில் கொள்ளுங்கள்.. மெல்லிய புன்னகையுடன் அந்த அழகி சாந்தமாக உட்காந்திருக்கும் அந்த புகைப்படம் போல் ரோமில் ஒரு ஓவியம் உள்ளது. அதன் பெயர் 'Young Woman with Unicorn' தமிழில் மொழிபெயர்த்தால்... பறக்கும் குதிரையுடன் இளம் பெண் என வரும்...!
இத்தாலிய ஓவியர் Raphael வரைந்த இந்த ஓவியம் தற்போது, ரோம் நகரின் Galleria Borghese (அருங்காட்சியகம்) இல் பலத்த பாதுகாப்போடு உள்ளது.
ஓவியர் Raphael, மோனலிசா ஓவியத்தில் இருந்து 'இன்ஸ்ஃபயர்' ஆகி வரைந்த ஓவியம் இது என தெரிவிக்கப்பட்டிருந்தாலும்... அசப்பில் மோனலிசா ஓவியம் போலவே உள்ளது. Oil வகை ஓவியமான இந்த ஓவியம் 1506 ஆம் ஆண்டு வரையப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவியம் தொடர்பாக பல ஆராய்ச்சிகள் காலா காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த ஓவியத்தில் உள்ள இளம் பெண் யார் எனவும், கையில் வைத்திருக்கும் விலங்கு நாய்க்குட்டியா, ஆட்டுக்குட்டியா போன்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு... அந்த விலங்கின் காதுகள் எங்கே போச்சு.. என்ற ரீதியிலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன..
அந்த பெண் யாரென கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆனால் பெண்ணின் கையில் இருப்பது நாய்க்குட்டி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஓவியம் சிதைவுற்றிருந்தது. அப்போது அது Oil ஓவியமாகவும், பின்னர் மறு சீரமைபு செய்யப்பட்டு.. அது Cancas ஓவியமாகவும் மாற்றப்பட்டது. அதன் பிறகு.. காணாமல் போன நாய்க்குட்டியின் காதுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்னும் பற்பல ஓவியங்கள் 'மோனலிசா' வில் இருந்து கவரப்பட்டு வரையப்பட்டும்... அதே ஓவியம் போல் பின்நாட்களில் பல மன்னர்கள் தங்களை வரைந்துகொண்டதும் வரலாறு..!! ஆனால் அழகி மோனலிசா.. என்றென்றைக்கும் ஒரே ஒருத்தி தான்! லூவர் அருங்காட்சியகத்தில் கம்பீரமாக நிற்கிறாள்!!