Paristamil Navigation Paristamil advert login

யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே…?

யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே…?

12 பங்குனி 2025 புதன் 16:17 | பார்வைகள் : 124


முன்னாள் ஜனாதிபதியான இவர் தன்னை பற்றி பெருமிதமாக பேசிக்கொள்வதில்  விருப்பம் உள்ளவர்.

தனது இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன்குற்றவாளிகளை தேடியலைந்ததையும்,16 வயதில் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றதையும் அவர் பெருமையுடன் கூறியவர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பை தவறவிட்டமை குறித்து 2016 இல் அவர் தெரிவித்திருந்தார். அந்த பெண் 1989 இல் சிறையில் கொல்லப்பட்டார்.

2016 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தனது ஈவிரக்கமற்ற போதைப்பொருளிற்கு எதிரான போரை ஹிட்லரின் யூத அழிப்பு நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டிருந்தார்.

ஹிட்லர் 3 மில்லியன் யூதர்களை கொலை செய்தார் பிலிப்பைன்சில் போதைப்பொருளிற்கு அடிமையான மூன்று மில்லியன் பேர் உள்ளனர் அவர்களை படுகொலை செய்வது குறித்து நான் மகிழ்ச்சியடைவேன் என்றார்.

பெண்களை  இழிவு செய்தல்  தன்னை பற்றிய மிகைப்படுத்தி கதைத்தல்  பத்திரிகைகளை தாக்குதல் ஆகியவற்றை விரும்புபவரான ஒரு ஜனரஞ்சகவாதியான பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்த போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனிலா விமான நிலையத்திற்கு அவர் வந்தவேளை சர்வதேச பொலிஸாரின் பிடியாணை அவருக்கு வழங்கப்பட்டது.

அவருடைய பதவிக்காலத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மின்டானாவோவில் உள்ள டாவோ நகரத்தின் முன்னாள் வழக்குதொடுநரும்,மேயருமான டுட்டெர்டே போதைப்பொருள் குற்றங்களை ஒழிப்பதாக வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் 2016 இல் பிலிப்பைன்ஸ் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியானார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அவர் ஈடுபட்டதால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் உடல்கள் மனிலா குடாவில் உள்ள மீன்களிற்கு உணவாக வழங்கப்பட்டன.

இவர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் போதைப்பொருள் ஒழிப்புநடவடிக்கைகளின் போது 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்  என சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் வறியமக்கள்,நகரப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் . பொலிஸாரினால் இனந்தெரியாத குழுக்களினால் சுடப்பட்டார்கள்.

தண்டனை வழங்குபவர் என  அழைக்கப்பட்ட 79 வயது டுட்டெர்டே 15 வயதில் துப்பாக்கி வைத்திருந்தமைக்காக பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டவர்.

அவர் சில பாடசாலைகளில் இருந்து நீக்கப்பட்டார்,தனது சக மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார்,ஆனால் எதற்காகவும் தண்டிக்கப்படவில்லை தப்பினார் இவரை கடுமையாக விமர்சித்தவரான பிலிப்பைன்சின் செனெட்டர் அந்தோனியோ டிரிலேன்ஸ் ஒரு முறை கார்டியனிற்கு தெரிவித்தார்.

இதுவே தண்டனையிலிருந்து விடுபடும் மனோநிலையை அவரிடம் உருவாக்கியிருக்கலாம் அவர் ஒருபோதும் தண்டிக்கப்படாததால் அவர் கொலைகளில் ஈடுபட்டார்,தனது விருப்பம் போல செயற்பட்டார் என செனெட்டர் தெரிவித்திருந்தார்.

நன்றி virakesari

 

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்