Saint-Ouen சந்தையில் இருந்து 3.5 தொன் போலி பொருட்கள் பறிமுதல்!!

12 பங்குனி 2025 புதன் 17:24 | பார்வைகள் : 991
Saint-Ouen நகரில் உள்ள மொத்த வியாபார சந்தையில் இருந்து சட்டவிரோத போலியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிரபல நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டி.சேர்டுகள், சப்பாத்துக்கள், கைப்பைகள் போன்றவை அதில் இருந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், மூவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் Dugny (Seine-Saint-Denis) நகரில் வசிக்கும் ஒருவர் நான்காவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து €4,500 யூரோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.