யுக்ரேன் விடயத்தில் அமெரிக்காவை நம்ப முடியாது... பிரெஞ்சு அமைச்சர் விளாசல்!!

12 பங்குனி 2025 புதன் 18:52 | பார்வைகள் : 993
யுக்ரேன் விடயத்தில் அமெரிக்காவை நம்ப முடியாது என பிரெஞ்சு ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நகர்வுகளை கணிக்கமுடியாது உள்ளது எனவும், தற்போதைய நிலையில் "யுக்ரேனுக்கான முதல் பாதுகாப்பு உத்தரவாதம் யுக்ரேனிய இராணுவமே.". அமெரிக்கா ஐரோப்பாவில் இருந்து சீனாவுக்கு திரும்புவது ஆச்சரியமல்ல என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம் என ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் Sébastien Lecornu தெரிவித்தார்.
30 நாட்கள் போர் நிறுத்தம் எனும் வார்த்தைகளை முதற்கட்டமாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அது எத்தனை தூரம் சாத்தியம் என்பது தொடர்பில் சந்தேகங்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க தூதுக்குழு விரைவில் ரஷ்ய ஜனாதிபதியுடன் உரையான சந்திப்புக்காக மொஸ்கோ பயணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.