மோட்டார் சைக்கிள்களுக்கான தொழில்நுட்ப ஆய்வு.. வேண்டுகோளினை நிராகரித்தது Le Conseil d'Etat!!
.jpg)
12 பங்குனி 2025 புதன் 19:07 | பார்வைகள் : 520
மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் தொழில்நுட்ப ஆய்வு அறிக்கை (Le contrôle technique) பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் சட்டம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினை எதிர்த்து மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் முறையீடு செய்திருந்ததர்.
இந்நிலையில், இந்த முறையீட்டினை Le Conseil d'Etat நிராகரித்துள்ளது. L பிரிவுக்குள் அடங்கும் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், ஓட்டுனர் உரிமம் தேவைப்படாத சிறிய ரக ஸ்கூட்டர்கள் என அனைத்துக்கும் இந்த தொழில்நுட்ப ஆய்வு அறிக்கை கட்டாயமானது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சட்டத்தை எதிர்த்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கான சங்கமான Fédération française des motards en colère இந்த மேல்முறையீட்டை கோரியிருந்தது. இதனைக் கண்டித்து பல ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தது. இந்நிலையில், மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் குதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.