மீண்டும் வருகிறது பனிப்பொழிவு!!

12 பங்குனி 2025 புதன் 21:00 | பார்வைகள் : 1307
நாளை, மார்ச் 13, வியாழக்கிழமை நாட்டின் கிழக்கு மாவட்டங்களில் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மிதமான வெப்பத்துடன் கூடிய காலநிலை பதிவான நிலையில், மீண்டும் குளிர், பனிப்பொழிவு பதிவாக உள்ளது. கிழக்கு, வடகுழக்கு பகுதிகளில் 5 தொடக்கம் 10 செ.மீ வரையான பனிப்பொழ்வு பதிவாகும் என Meteo France அறிவித்துள்ளது.
இந்த பனிப்பொழிவு காரணமாக Côte-d'Or, Haute-Saône, Haute-Marne, Vosges, Meuse, Meurthe-et-Moselle, Moselle, Bas-Rhin ஆகிய 8 மாவட்டங்களுக்கும் ’மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.