Paristamil Navigation Paristamil advert login

ஆடு மேய்த்த முன்னாள் கல்வி அமைச்சர்! - வரலாற்றில் இருந்து!!

ஆடு மேய்த்த முன்னாள் கல்வி அமைச்சர்! - வரலாற்றில் இருந்து!!

24 வைகாசி 2017 புதன் 14:30 | பார்வைகள் : 18310


பிரான்சின் முன்னாள கல்வி அமைச்சர் குறித்து உங்களுக்கு தெரிந்தே இருக்கும். Najat Vallaud-Belkacem அவர் பெயர்!!  'ஒழுங்கா படிக்கவில்லை என்றால் ஆடு தான் மேய்க்கனும்!' என சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஆடு மேய்த்த சிறு சிறுமி கல்வி அமைச்சர் ஆனது தான் இந்த வரலாறு. 


 
மொரோக்கோ நாட்டின்  Bni Chiker நகரில், 1977 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 பிறந்த இவர், ஏழு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது சிறுமி. மிக வறிய குடும்பம். இவரின் அப்பா ஒரு கட்டிட கலைஞர். 1982 ஆம் ஆண்டு Amiens நகரின் புறநகரில் அகதியாக குடியேறினார். பின்னர் 2002 ஆம் ஆண்டு, பரிசில் அரசியல் கல்வி கற்றார். 


 
தனது ஆரம்ப வயதில் பல வறுமைகளை சந்தித்திருந்தாலும், தனது கல்வி கற்கும் எண்ணத்தை கைவிடவே இல்லை. அரசியல் தொடர்பாக நிறைய கற்றுக்கொண்டதோடு, 2005 ஆம் ஆண்டு Boris Vallaud ஐ சந்தித்து, காதல் திருமணமும் செய்துகொண்டார். 

கற்றுக்கொண்ட அரசியல், Najatஐ வெகுவாக அரசியல் பக்கம் ஈர்த்தது. பின்னர், 2002 ஆம் ஆண்டில், சோசலிச கட்சியில் அங்கத்தவராக இணைந்தார். 


 
பின்னர் 2005 ஆம் ஆண்டு சோசலிச கட்சியின் ஆலோசகராக மாறினார். 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து Najatஐ பெண்கள் உரிமை அரச பேச்சாளராக நியமித்தார். பின்னர் தனது 36 வது வயதில் கல்வி அமைச்சராக 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில் பதவியேற்றார். 

 

பிரான்சின் இளைய தலைமுறை அமைச்சர் இவராவார். அதன் பின்னர் இவ்வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், இம்மானுவல் மக்ரோன் வெற்றி பெற, கல்வி அமச்சராக தொடர்ந்தும் Najat நீடிப்பார் என நம்பியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. 
 
இருந்தாலும் புதிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும், Najat உம் சிறந்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்வி அமைச்சராக இருந்த Najat இன் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிகப்பெரும் வைரலாக உலாவி வருகிறது. அதில் Najat ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார். இது உண்மையா என கேட்டால்... உண்மைதான்... முன்னாள் கல்வி அமைச்சர் தனது பால்ய வயதில் ஆடு மேய்த்துள்ளார்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்