பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா ?

13 பங்குனி 2025 வியாழன் 14:04 | பார்வைகள் : 459
பொதுவாக கோடை காலத்தில் கிடைக்கும் பல பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அத்தகைய ஒரு பழமாக பலாப்பழம் உள்ளது. இந்த பழம் நம்பமுடியாத அளவிற்கு சத்தானது மற்றும் தற்போது மேற்கத்திய நாடுகளில் பிரபலமாகி வருகிறது. இந்த சத்தான பழம் பல இந்திய மாநிலங்களின் பாரம்பரிய கறிகள் மற்றும் சைவ தயாரிப்புகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
பலா இரண்டு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக, இது இளசாக இருக்கும் போது அதாவது பலாப்பிஞ்சு மற்றும் பலாக்காயாக இருக்கும் போது சமையலில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் பலா நன்கு பழுத்து இனிப்பாக மாறும் போது சுவை மிகுந்த பழமாக சாப்பிடப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த பலாப்பழம், நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் பண்புகள் நிறைந்துள்ளன. இவை நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் பண்புகள் நிறைந்த பலாப்பழம், இந்தியாவில் தான் முக்கியமாகக் கிடைக்கிறது. உலகளவில் பலாப்பழ உற்பத்தியில் இந்தியாவும் வங்கதேசமும் முன்னணியில் உள்ளன. இது ஒரு வெப்பமண்டல பழம். இதில் வைட்டமின்கள் (ஏ, சி), தியாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
பலாப்பழம் சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ரத்த சோகை, எலும்பு நோய்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இந்த பழம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பலாப்பழம் இது இரும்புச்சத்தின் சிறந்த மூலமாகும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலாப்பழத்தில் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின், கரோட்டினாய்ட்ஸ் உள்ளன, இவை கண்களை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் மற்றும் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கின்றன.