Paristamil Navigation Paristamil advert login

யுவன் மீண்டும் தயாரிப்பாளராக வெற்றி பெறுவாரா ?

யுவன் மீண்டும் தயாரிப்பாளராக வெற்றி பெறுவாரா ?

13 பங்குனி 2025 வியாழன் 14:10 | பார்வைகள் : 7836


தமிழ் சினிமா உலகில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. அவரது அப்பா இசையமைப்பாளர் இளையராஜா கூட சில பல படங்களைத் தயாரித்துள்ளார்.

அப்பா வழியில் 2018ல் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் யுவன். அதன்பின் 2022ல் வெளிவந்த 'மாமனிதன்' படத்தைத் தயாரித்தார். சில பல சிக்கல்களால் அந்தப் படம் தாமதமாக வந்தது. ஆனால், படம் வெற்றி பெறவில்லை. அடுத்து கடந்த வருடம் ஓடிடியில் வெளிவந்த 'பொன் ஒன்று கண்டேன்' படத்தை இணைந்து தயாரித்தார்.

அடுத்து அவர் தயாரித்துள்ள 'ஸ்வீட் ஹார்ட்' படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக புரமோஷன் செய்ய யுவனே களத்தில் இறங்கியுள்ளார். சில யு டியூப் சேனல்களுக்குக் கூட பேட்டி கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளராக மீண்டும் ஒரு வெற்றியைப் பதிக்க வேண்டுமென யுவன் விரும்புவதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்