Paristamil Navigation Paristamil advert login

புடினுடன் போர் - எச்சரிக்கும் நிபுணர்கள்

புடினுடன் போர் - எச்சரிக்கும் நிபுணர்கள்

14 பங்குனி 2025 வெள்ளி 08:37 | பார்வைகள் : 530


ரஷ்யாவுடன் போருக்குத் தயாராவதைவிட, ஐரோப்பாவுக்கு வேறு வழியில்லை என ராணுவ நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் கொள்கைகள் மாறிவரும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ரஷ்யாவுடனான போருக்குத் தயாராவதைத் தவிர ஐரோப்பாவுக்கு வேறு வழியில்லை என்கிறார் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஆய்வாளரான மைக்கேல் கிளார்க் என்பவர்.

போர் நிறுத்தத்துக்காக அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என ட்ரம்ப் உறுதியளித்திருக்க, நீண்டகால போர் நிறுத்தத்தையாவது கொண்டுவர அமெரிக்க தரப்பு விரும்புகிறது.

ஆனால், போர் நிறுத்தத்தைக் கூட ரஷ்யா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் மைக்கேல்.

அந்த காலகட்டத்தை, தனது ராணுவத்தை வலுப்படுத்துவதற்காக புடின் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்கிறார் மைக்கேல்.

ஆக, மீண்டும் ரஷ்யா அடுத்த ஆண்டு உக்ரைனை ஊடுருவலாம், அல்லது, ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் வரை காத்திருக்கலாம் என்கிறார் அவர்.

ஆக, அடுத்து பால்டிக் நாடுகள் மீது கண் வைப்பார் புடின் என்று கூறும் முன்னாள் நேட்டோ தளபதி ஒருவர், புடினைப் பொருத்தவரை முன்னிருந்த சோவியத் யூனியன் நாடுகளை மீண்டும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர் விரும்புகிறார் என்கிறார் அவர்.

ஆக, புடினால் ஐரோப்பாவுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம், எனவே, ரஷ்யாவை எதிர்கொள்ள தயாராகவேண்டும் என்ற எண்ணம் ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு வரத் துவங்கியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்