6000 கோடி ரூபாய் இலக்கு… ஐபிஎல் விளம்பர வருவாய்: ஜியோஸ்டார் புதிய சாதனை

14 பங்குனி 2025 வெள்ளி 08:47 | பார்வைகள் : 3844
ஐபிஎல் விளம்பர வருவாய் மூலம் ஜியோஸ்டார் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் டி-20 தொடர் மார்ச் 22-ம் திகதி தொடங்கி மே 25-ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஜியோஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தனி இடம் உண்டு. அதே சமயம் ரசிகர்களின் ஆர்வம் விளம்பர வருவாயிலும் எதிரொலிப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் ஒளிபரப்புகிறது.
அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில், ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் சுமார் 6,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து 3,900 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 58 சதவீதம் வளர்ச்சி காணும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ஜியோஸ்டார் நிறுவனத்திற்கு கிடைத்திருப்பதால், டிஜிட்டல் தளங்களில் இருந்து 55 சதவீதமும், தொலைக்காட்சியில் இருந்து 45 சதவீதமும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1