சுவிட்சர்லாந்தில் மோட்டார் சைக்கிள் விதிகளை மீண்டும் மாற்ற கோரிக்கை

14 பங்குனி 2025 வெள்ளி 09:07 | பார்வைகள் : 318
சுவிட்சர்லாந்தில், 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் 125 cc மோட்டார் சைக்கிள்களை ஓட்ட அனுமதி இல்லை என்னும் விதி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டது.
தற்போது மீண்டும் அந்த விதியைக் கொண்டுவரவேண்டுமென சாலை பாதுகாப்பு பிரச்சார அமைப்புகள் கோரிவருகின்றன.
சுவிட்சர்லாந்தில் தற்போது 16 வயதுடையவர்களும் 125 cc மோட்டார் சைக்கிள்களை ஓட்ட அனுமதி உள்ளது.
ஆனால், விபத்துக்களில் சிக்கும் இளம் வயதினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
ஆகவே, 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் 125 cc மோட்டார் சைக்கிள்களை ஓட்ட அனுமதி இல்லை என்னும் விதியை மீண்டும் கொண்டுவரவேண்டும் என சாலை பாதுகாப்பு பிரச்சார அமைப்புகள் கோரிவருகின்றன.
ஆனால், தற்போது 125 cc மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே, விபத்தில் சிக்குவோர் எண்ணிக்கை அதிகமாக தெரிவதற்குக் காரணம் என்கிறார்கள் மோட்டார் சைக்கிள் இறக்குமதி கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.
மோட்டார் சைக்கிள் ஓட்ட விரும்புவோருக்கு நல்ல பயிற்சி வேண்டும், அபாயங்கள் குறித்து 16 வயதுடையவர்களுக்கு கற்றுக்கொடுத்தாலே போதும் என்கிறார்கள் வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர்கள்.