பனிப்பொழிவு : 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
.jpg)
14 பங்குனி 2025 வெள்ளி 10:01 | பார்வைகள் : 422
இன்று மார்ச் 14, வெள்ளிக்கிழமை மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது. 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் வடக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பனிப்பொழி பதிவாகும் என Meteo France அறிவித்துள்ளது. இன்று மாலை 7 மணியில் இருந்து நாளை சனிக்கிழமை காலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களானவை,
Aisne, Hautes-Alpes, Ardennes, Ariège, Aube, Calvados, Côte-d'Or, Côtes d'Armor, Eure, Haute-Garonne, Manche, Marne, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Nord, Oise, Orne, Pas-de-Calais, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Haute-Saône, Saône-et-Loire, Seine-Maritime, Somme, Vosges மற்றும் Yonne ஆகிய 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 0 தொடக்கம் 4°C வரை குளிர் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.