Paristamil Navigation Paristamil advert login

இம்மானுவல் மக்ரோன்! - Lycée முதல் Élysée வரை!!

இம்மானுவல் மக்ரோன்! - Lycée முதல்   Élysée வரை!!

12 வைகாசி 2017 வெள்ளி 11:30 | பார்வைகள் : 18475


இன்றை பிரெஞ்சு புதினத்தில், புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள இம்மானுவல் மக்ரோனின் Lycée முதல் 
 Élysée வரை, வாழ்க்கைப் பயணத்தின் சில முக்கிய தடங்களை பார்க்கலாம்!!
 
இவரின் முழுப்பெயர் 'Emmanuel Jean-Michel Frédéric Macron'. சுருக்கமாக Macron!! மிக குறுகிய காலத்திலும், மிக சிறிய வயதிலும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் தான் என்பது ஆச்சரியமான செய்தி. டிசம்பர் 21, 1977 இல் பிறந்த இவருக்கு இப்போது 39 வயது. மாவீரன் நெப்போலியன் தனது 40 ஆவது வயதில் ஜனாதிபதியானான்.  மக்ரோன் அந்த சாதனையை தகர்த்தெறிந்துள்ளார். 
 
Amiens இல் பிறந்த இவர்,  Paris Nanterre  பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்தார். படிப்புக்கு சம்மந்தம் இல்லாமல், வங்கி ஒன்றில் முதலீட்டு வங்கியாளராக பணிபுரிந்தார். 
 
 பொது விவகார படிப்பில் 'மாஸ்டர்' பட்டம் பெற்றார்,  École nationale d'administration இல், 2004 ஆம் ஆண்டு பட்டதாரியாக வெளியேறினார். 2004 இல் இருந்து 2006 வரை Inspectorate General of Finances (IGF) இல் முதலீட்டு வங்கியாளர் பணியில் சேர்ந்தார். 
 
அதன் பின்னர் 2006 இல் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்துவுடன் சோசலிச கட்சியில் சேந்தார்.  இதுவே அரசியல் வாழ்க்கையின் ஆரம்பம். 2009 வரை துணை பொதுச்செயலாளர் பதவியில் நீடித்த மக்ரோன், 2012 ஆம் ஆண்டு பொருளாதார அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
 
அதன் பின்னர், 2016 ஆம் ஆண்டு தன் பதவியை ராஜினாமா செய்து, சோசலிச கட்சியை விட்டும் விலகுகிறார்.  அதன் பின்னர், தான் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். சோசலிச கட்சி, தீவில இடதுசாரி என இரு ஆண்டாண்டு கால கட்சிகள் இருக்கும் போது, அதற்கு மாற்றாக என் கட்சி இருக்கும் என இம்மானுவல் மக்ரோன் அறிவித்தார். 'மக்ரோனுக்கு ஏன் இப்படியெல்லாம் புத்தி போகிறது ?' என அவரை ஏளனமாக பார்க்கத்தொடங்கினார்கள். 
 
ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி 2016 கட்சி ஆரம்பித்தார்.  ஜனாதிபதி தேர்தல் ஒருவருடங்களின் பின்னர், ஏப்ரல் 23 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு இடம்பெறப்போவதாக அறிவிக்கப்பட்டது. 
 
பிரான்சுவா பியோன் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்க, மரீன் லூ பென், ஹம்மன், மனுவல் வால்ஸ் என பிரபலமான பெயர்களும் அடிபட.., 'இம்மானுவல் மக்ரோன்!' குறித்து எந்த 'ஐடியா'க்களும் யாருக்கும் இல்லை!!
 
அப்போதுதான், அந்த புயல் காற்று வீசியது. பிரான்சுவா பியோன் ஊழல் வழக்கில் சிக்கினார். செல்வாக்கு சரியத்தொடங்கியது. பெருவாரியான நம்பிக்கை வைத்த பியோன் 'இப்படியாகிவிட்டதே!' என பிரெஞ்சு மக்கள் கவலை கொள்ள, சரியான நூல் பிடித்து தன் பிரச்சாரங்களை முன் வைத்தார் இம்மானுவல் மக்ரோன். 
 
'மீடியா' எனும் அதிஷ்ட்டக்காற்று மக்ரோன் பக்கம் திரும்பியது. மரீன் லூ பென்னின் கொள்கைகள், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் 'தலைப்புச்செய்தி'க்கு மாத்திரமே பயன்படும்.. நாட்டுக்கு உதவாது என்பதை ஊடகங்கள் தெரிந்துவைத்திருந்தன. 
 
இம்மானுவல் மக்ரோன் எவரையும் விமர்சிக்கவில்லை. தொடர்ச்சியாக கண்மூடித்தனமாக விமர்சித்த மரீன் லூ பென்னை பார்த்து, 'நீங்கள் விமர்சனம் செய்கிறீர்களே தவிர்த்து, எந்த ஆலோசனைகளையும் முன்மொழியவில்லை!' தெரிவித்ததோடு, மக்ரோன் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் அபார வெற்றி பெற்றுள்ளார் அறிவிக்கப்பட்டது. 
 
அடுத்த 14 வது நாளில், இரண்டாம் சுற்றில் பெரும்பான்மையான வாக்குகளால் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆனார். மே 14 (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி பதவியேற்பு விழா இடம்பெற, Élysée செல்கிறார் மக்ரோன்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்