Paristamil Navigation Paristamil advert login

'கைதி 2' மீண்டும் தள்ளிப்போகிறதா?

 'கைதி 2' மீண்டும் தள்ளிப்போகிறதா?

14 பங்குனி 2025 வெள்ளி 14:27 | பார்வைகள் : 155


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் "கூலி" படத்தை இயக்கி வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தி நடிக்கும் "கைதி 2" படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. "கூலி" படப்பிடிப்பு முடிந்தவுடன் "கைதி 2" படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியது.

கார்த்தியும் சமீபத்தில் அளித்த பேட்டிகளில், அடுத்த படம் "கைதி 2" தான் என உறுதியாக கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவல் படி, "கூலி" படத்தை முடித்தவுடன் லோகேஷ் கனகராஜ் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரின் படத்தை இயக்கப் போவதாகவும், அதன் பிறகு தான் "கைதி 2" படத்தை தொடங்குவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால், "கைதி 2" திரைப்படம் 2026 ஆம் ஆண்டில் தான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாகவும், இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட இருப்பதால் "கைதி 2" க்கு முன் இந்த படத்தை முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட பல வருடங்களாக "கைதி 2" திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு வருடம் இந்த படம் தள்ளிப் போகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது, சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்