Paristamil Navigation Paristamil advert login

சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் ’விட்டமின் டி’ குறைபாடு உண்டாகுமா..?

 சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் ’விட்டமின் டி’ குறைபாடு உண்டாகுமா..?

14 பங்குனி 2025 வெள்ளி 15:12 | பார்வைகள் : 149


நம்முடைய சருமத்தை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு அத்தியாவசியமான சரும பராமரிப்புப் பொருளாக சன்ஸ்கிரீன் உள்ளது. பலர் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துகிறார்கள். இந்த பழக்கம் சருமம் வைட்டமின் டி உறிஞ்சும் தன்மையை குறைத்து வைட்டமின் டி குறைபாடு ஏற்பட வழிவகுக்குமா என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா..?

வெயிலில் செல்லும் போது உடல் வைட்டமின் டி உற்பத்தி செய்வதால், தொடர்ந்து சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது இந்த இயற்கை செயல்முறையில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று சிலர் நம்புகிறார்கள். இது உண்மையா என்று இங்கே பார்க்கலாம்.

"சன்ஷைன் வைட்டமின்" என்று குறிப்பிடப்படும் வைட்டமின் டி-ஆனது, சூரியனில் இருந்து வரும் UVB கதிர்களை நம் தோல் உறிஞ்சும் போது இயற்கையாக உற்பத்தியாகிறது. UVB கதிர்கள் நமது உடலில் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்ய உதவுகின்றன. வைட்டமின் டி-யானது எலும்புகள் வலுவாக இருக்க, நோயெதிர்ப்பு செயல்பாடு சிறப்பாக இருக்க மற்றும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம். அதே நேரம் சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் UVB கதிர்களைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன. எனவே சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் உடலின் வைட்டமின் டி உற்பத்தியில் தலையிடும் என்ற கவலையை பலருக்குள் ஏற்படுத்தி உள்ளது.

அதிக SPF அளவுடன் கூடிய சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தும்போது, ​​சருமம் UVB கதிர்களை உறிஞ்சும் திறனை அது குறைக்கும், இதன் மூலம் வைட்டமின் டி உற்பத்தியும் குறையும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இருப்பினும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் வெயிலுக்கு வெளிப்படும் தங்களின் அனைத்து சரும பகுதிகளிலும் சமமாக, அடர்த்தியான லேயரில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதில்லை, இதனால் சன்ஸ்கிரீன் அப்ளை செய்திருந்தாலும் சில UVB கதிர்கள் சருமத்தில் ஊடுருவி வைட்டமின் டி செயல்முறை நடைபெறுகிறது. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அதிக SPF சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் மக்கள் கூட போதுமான அளவு வைட்டமின் டி-யை உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் சன்ஸ்கிரீன் UVB கதிர்கள் சருமத்தில் ஊடுருவுவதை குறைக்கும் அதே வேளையில், வைட்டமின் டி உற்பத்தியை முற்றிலுமாக தடுக்காது.

சன்ஸ்கிரீனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை. அமெரிக்க தோல் மருத்துவ அகாடமியைச் சேர்ந்த நிபுணர்கள் உட்பட பல நிபுணர்கள், பெரும்பாலான மக்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினாலும் கூட, வைட்டமின் டி உற்பத்திக்கு போதுமான சூரிய ஒளியை பெறுவதாக கூறுகின்றனர். இதற்குக் காரணம்:

சருமத்தில் அப்ளை செய்த சன்ஸ்கிரீன் சில மணிநேரங்களுக்கு பிறகு மறைந்து விடும சன்ஸ்கிரீனை பயன்படுத்தும் போது சருமத்தின் சில பகுதிகளில் தடவ தவறவிடுகிறார்கள்சன்ஸ்கிரீன் இல்லாமல்) சில நிமிடங்கள் சூரிய ஒளியில் சருமம் இருந்தால் கூட வைட்டமின் டி அளவை பராமரிக்க உதவும்
சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன் காலை அல்லது பிற்பகல் 10-15 நிமிடங்கள் வெயிலில் நேரம் செலவிடுங்கள்
கொழுப்பு நிறைந்த மீன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்

 மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால் வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ் எடுப்பதை கருத்தில் கொள்ளுங்கஇந்த கேள்விக்கு பதில் வேண்டாம் என்பதே.!! ஏனென்றால் சன்ஸ்கிரீன் பயன்பாடு நேரடியாக வைட்டமின் டி குறைபாட்டை ஏற்படுத்தாது, எனவே அதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. சன்பர்ன், முன்கூட்டியே வயதான தோற்றம் மற்றும் சரும புற்றுநோய் போன்வற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது மிக முக்கியம். டயட், சப்ளிமென்ட்ஸ் மற்றும் ஒருசில நிமிடங்கள் வெயிலில் நிற்பது போன்ற செயல்கள் மூலம் ஆரோக்கியமான வைட்டமின் டி அளவை பராமரிக்கலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்