Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமா... எப்படி திட்டமிடுவது?

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமா... எப்படி திட்டமிடுவது?

14 பங்குனி 2025 வெள்ளி 16:23 | பார்வைகள் : 5862


முதல் குழந்தைக்கு பிறகு உடனடியாக அடுத்த குழந்தையா அல்லது சில வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? நீண்ட வருடங்கள் ஆகிவிட்டால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி தம்பதிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதோடு உடல்நலம், பொருளாதார சூழ்நிலை போன்ற பல காரணங்கள் இதில் அடங்கும்.

ஆனால் 40 வயதிலும் பல பெண்கள் கருவுற்றிருக்கிறார்கள். சில பெண்களுக்கு குடும்ப அரவணைப்பு முழுமையாக கிடைக்கும் போது இரண்டு குழந்தைகளை வெற்றிகரமாக வளர்க்க முடியும்.

முதல் குழந்தைக்கு பிறகு மீண்டும் இரண்டாவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் பின்வரும் காரணங்களை கவனித்து முடிவு செய்யலாம்.

உடல் ஆரோக்கியம்:
முதல் கர்ப்பம் சிக்கல் இல்லாமல் ஆரோக்கியமானதா அல்லது சிக்கல் நிறைந்ததா என்பதை யோசிக்க வேண்டும். முதல் குழந்தைக்கு எடைகுறைப்பு, வேறு குறைபாடுகள் இருந்தால் 2-வது குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் திட்டமிடலாம்.

வயது:

கருத்தரிக்க பெண்களின் வயது மிகவும் முக்கியம். 2-வது குழந்தை பெற்றுக்கொள்வதிலும் வயது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் பெண்கள் வளர வளர அவர்களின் மாதவிடாய் சுழற்சி முறையிலும், கருமுட்டை உற்பத்தி அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

மேலும் கருத்தரிக்க பெண்ணின் வயது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஆண்களின் வயதும் மிகவும் முக்கியம். ஏனென்றால் 35 வயதை கடந்தவுடன் ஆண்களுக்கு விந்தணுக்களின் தரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.

திட்டமிடுதல்:

இன்றைய சூழலில் 2-வது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு நிதியும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் செலவுகள் இரட்டிப்பாகும். நீங்களும், உங்கள் துணையும் பொருள் ஈட்டினாலும் இரண்டு குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்ற இதர செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

கணவன் -மனைவி இருவரும் இணைந்து பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் பேசிய பிறகு இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கலாம். இல்லை என்றால் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

குழந்தை பராமரிப்பு:
குழந்தையை பராமரிப்பதில் முதல் குழந்தைக்கு நேரத்தை ஒதுக்குவது மற்றும் குழந்தையை கவனிக்க குடும்ப உறுப்பினர்கள் உள்ளனரா என்பதையும் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதிலும் சிரமம் ஏற்படும்.

வயது இடைவெளி என்பது முதல் குழந்தைக்கும் 2-வது குழந்தைக்கும் இடையே உள்ள வயது இடைவெளியை கவனிக்க வேண்டும்.

பரிசோதனை:

முதல் குழந்தை சிசேரியனாக இருந்தால் குறைந்தது 2 வருடங்களாவது இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்க வேண்டும்.
ஏனெனில் சிசேரியனுக்கு பிறகு மருத்துவரின் அறிவுரையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கமான பரிசோதனையை கணவன் - மனைவி இருவரும் செய்ய வேண்டும்.

ஆரம்பத்திலேயே இரும்புச்சத்து குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் பிரசவித்த பின்னர் ஏராளமான பெண்கள் ரத்த சோகை சிக்கலை ச ந்திக்கிறார்கள்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்