Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று….

ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று….

14 பங்குனி 2025 வெள்ளி 16:28 | பார்வைகள் : 1178


ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும், பயங்கரமாக பரவக்கூடிய வைரஸ் தொற்று ஒன்று தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த தொற்று, ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

அந்த தொற்று, மண்ணன், தட்டம்மை அல்லது மணல்வாரி (measles) என்னும் வைரஸ் தொற்று ஆகும்.

உலக சுகாதார அமைப்பும் Unicef அமைப்பும், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 2024ஆம் ஆண்டில் மட்டும் 127,350 பேருக்கு தட்டம்மை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

காற்றுன் மூலம் பரவும் இந்த தட்டம்மை வைரஸ், நுரையீரலை பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் வடிதல் இவற்றுடன் உடலில் சிவப்புப் புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் ஏற்படுவது இந்த நோயின் அறிகுறியாகும்.

ஐரோப்பாவில், 40 சதவிகித தட்டம்மைத் தொற்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்தான் பாதித்துள்ளதாக Unicef தெரிவித்துள்ளது.

விடயம் என்னவென்றால், இரண்டு டோஸ் தட்டம்மைக்கான தடுப்பூசி போட்டிருந்தாலே, அது 97 சதவிகித பாதுகாப்பை அளிக்கும்.

பிரித்தானியாவிலும் தட்டம்மைத் தொற்று அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் இந்த தொற்றைத் தடுக்க சிறந்த வழி என்கிறார்கள்.

தட்டம்மைக்கான தடுப்பூசி பெறாதவர்கள் இப்போது கூட பெற்றுக்கொள்ளலாம். அதுவே தட்டம்மைத் தொற்றிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளவும், மற்றவர்களுக்கு பரவாமல் காத்துக்கொள்ளவும் சிறந்த வழி என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்