ஜேர்மனியின் தலைவரைச் சந்திக்கும் ஜனாதிபதி மக்ரோன்!!

14 பங்குனி 2025 வெள்ளி 18:47 | பார்வைகள் : 634
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஜேர்மனியின் தலைவர் Olaf Scholz இனை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பு ஜேர்மனியின் பெர்லின் நகரில் வைத்து எதிர்வரும் மார்ச் 18, செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ளது. இந்த சந்திப்பில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, ஐரோப்பிய எல்லைப்பாதுகாப்புக்காக €800 பில்லியன் யூரோக்கள் நிதியினை திரட்டும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்படும் என ஜேர்மனியின் அரச பேச்சாளர் Steffen Hebestreit தெரிவித்தார்.