Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கொலையில் முடிந்த நண்பர்களுக்கிடையே மோதல் 

இலங்கையில் கொலையில் முடிந்த நண்பர்களுக்கிடையே மோதல் 

15 பங்குனி 2025 சனி 05:11 | பார்வைகள் : 202


வெல்லாவௌி - சின்னவத்தை பிரதேசத்தில் நேற்று மது அருந்தச் சென்ற நண்பர்களுக்கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில், வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய புவனேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளார். 

நேற்று பகல் 12 மணியளவில் புவனேந்திரராசா அவருடைய 3 நண்பர்களுடன் சின்னவத்தை பகுதியிலுள்ள வயல்பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளார். 

இந்த நிலையில் குறித்த நபருக்கும் ஏனைய 3 நண்பர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அவர் மீது 3 பேரும் பொல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

குறித்த வயல்பகுதிக்கு மாலை வேளையில் சென்ற கிராம உத்தியோகத்தர் சடலம் ஒன்று இருப்பதைகண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் குறித்த நண்பரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் 3 நண்பர்களையும் பொலிஸர் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்