Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் முதன்முறையாக.. - நாசித்துவாரம் வழியாக 'கொவிட் 19' சிகிச்சை!

பிரான்சில் முதன்முறையாக.. - நாசித்துவாரம் வழியாக 'கொவிட் 19' சிகிச்சை!

15 பங்குனி 2025 சனி 06:13 | பார்வைகள் : 742


கொவிட் 19 தொற்றுக்கு எதிராக நாசித்துவாரம் வழியாக சிகிச்சை வழங்கும் முறையை விரைவில் பிரெஞ்சு மருத்துவத்துறை முன்னெடுக்க உள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியினை அடுத்து முதன்முறையாக இந்த சிகிச்சை பிரான்சில் முன்னெடுக்கப்பட உள்ளது. விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வெற்றியளித்ததை அடுத்து, மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட உள்ளது.

பேனை போன்று இருக்கும் சிறிய ஊசியினால் மூக்கின் துவாரம் வழியாக தெளிப்பான் (ஸ்பிரே) செய்வதன் மூலம் வலியின்றி சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும், இந்த சிகிச்சை ஒரு தடுப்பூசிக்கு சமனானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகை சிகிச்சையினால், கொவிட் 19, சுவாசத்தொற்று, காய்ச்சல் போன்ற தொற்று வியாதிகளுக்கு விரைவான சிகிச்சையை மேற்கொள்ள முடியும் எனவும், தொற்று பரவாமல் தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வருட இறுதியில் இது முழுநேர சிகிச்சையாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்