இலங்கையில் குரங்கு கணக்கெடுப்பு நிறைவு

15 பங்குனி 2025 சனி 07:36 | பார்வைகள் : 218
தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று காலை 8 மணிக்கும் ஆரம்பித்து 8.05க்கு நிறைவடைந்தது.
தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடம் வரையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்திருந்தது.
அதன்படி, காலை 8:00 மணி முதல் 8:05 மணி வரை, ஒருவர் தனது தோட்டம், சாகுபடி நிலம், புனித இடங்கள் மற்றும் பிற பொது இடங்களை 5 நிமிடங்கள் கண்காணித்து, அந்த நேரத்தில் வளாகத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள், மர அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து , கணக்கெடுப்பு தாளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.