ஈராக்கில் படுகொலை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.

15 பங்குனி 2025 சனி 08:01 | பார்வைகள் : 364
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு கதீஜா படுகொலை செய்யப்பட்டுள்ளாதாக ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபு கதீஜா படுகொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், நம்முடைய துணிச்சலான போர் வீரர்கள் தயக்கமின்றி அவரை வேட்டையாடி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதனுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் கொல்லப்பட்டு உள்ளார். வலிமையின் வழியே கிடைத்த அமைதி என டிரம்ப் இதனை குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்காவுடன் சேர்ந்து ஈராக் மற்றும் குர்திஷ் படைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபு கொல்லப்பட்டுள்ளதாகவும் ஈராக் பிரதமர் உறுதி செய்துள்ளார்.
ஈராக் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆபத்து நிறைந்த பயங்கரவாதிகளில் முக்கிய நபராக அபு உள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் உத்தரவிட கூடிய முக்கிய பதவியில் அவர் இருந்துள்ளார். அபு கொல்லப்பட்டது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.