பரிஸ் : பாலியல் தொழிலாளியை கடத்தி வல்லுறவு.. ஒருவர் கைது!!

15 பங்குனி 2025 சனி 14:00 | பார்வைகள் : 974
பாலியல் தொழிலாளி பெண் ஒருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 13, நேற்று முன்தினம் வியாழக்கிழமை இச்சம்பவம் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Rue Chardon-Lagache வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அருகில் வசிக்கும் சிலர் குறித்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர். அங்கு பெண் ஒருவரை கத்தி முனையில் மிரட்டி அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நிலையில், அப்பெண் மீட்கப்பட்டார்.
அத்துடன் அவரைக் கடத்தி வந்த 48 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ளார். 1 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.