Paristamil Navigation Paristamil advert login

Tulle எனும் கிராமத்தைத் தேடி...!!

Tulle எனும் கிராமத்தைத் தேடி...!!

2 வைகாசி 2017 செவ்வாய் 12:31 | பார்வைகள் : 18586


இந்த Tulle எனும் பெயரை எங்கோ கேள்விப்பட்டது மாதிரி இருக்கே...என யோசிக்கிறீர்களா... அட.. அதாங்க.. நம்ம ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க சென்ற ஊரின் பெயர்..!! எங்கே உள்ளது இந்த Tulle??!! பிரான்சுவா ஒலோந்துக்கும் இந்த ஊருக்கும் என சம்பந்தம்??!  வாங்க தேடலாம்!!
 
Nouvelle-Aquitaine மாகாணத்தில் உள்ள Corrèze எனும் மாவட்டம், அங்கு தான் உள்ளது இந்த Tulle எனும் சிறு நகரம். 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி இந்த நகரத்தில் 16,000 பேர் வசித்ததாக சொல்லப்படுகிறது. Nouvelle-Aquitaine மாகாணத்தில் உள்ள, மூன்றாவது மிகப்பெரிய சனத்தொகை கொண்ட நகரம் இது. 
 
கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றின் போது, ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து தனி விமானத்தில் இங்கு சென்று வாக்களித்துவிட்டு, போன வேகத்திலேயே திரும்பி வந்தார். பிரான்சுவா ஒலோந்து இந்த நகரத்தின் முன்னாள் நகர முதல்வராக இருந்துள்ளார். 
 
2001 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை பிரான்சுவா ஒலோந்து இங்கு நகர முதல்வராக பணியாற்றினார். அதன் போது அவர் குடும்பத்துடன் வசித்ததும் இங்கே தான். அதன்போது வாக்காளர் பட்டியல் இந்த நகரத்திலேயே பதியப்பட்டு இருந்தது. அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
தவிர, மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெற இருக்கும் இரண்டாவது சுற்று தேர்தலின் போதும், பிரான்சுவா ஒலோந்து இங்கு சென்றுதான் வாக்களிக்கவேண்டும். 
 
இது ஒரு புறம் இருக்க, விளையாட்டு மைதானங்கள், அருங்காட்சியங்கள், தேவாலயங்கள், திரையரங்குகள், கலாச்சார நிகழ்வுகள் என பாரம்பரியம் நிறைந்த ஒரு பிரெஞ்சு நகரமாக இது திகழ்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்